'டப்' கொடுக்கும் பா.ஜ., வேட்பாளர்: ராகுலுக்கு வெற்றி கிட்டுமா?
'டப்' கொடுக்கும் பா.ஜ., வேட்பாளர்: ராகுலுக்கு வெற்றி கிட்டுமா?
UPDATED : மார் 25, 2024 09:44 AM
ADDED : மார் 25, 2024 09:29 AM

திருவனந்தபுரம்: வழக்கமாக கேரள மாநிலம் வயனாட்டில் போட்டியிடும் காங்., எம்.பி.,ராகுலுக்கு எதிராக நிறுத்தப்பட்டிருக்கும் பா.ஜ., வேட்பாளர் காங்கிரசுக்கு கொஞ்சம் சவாலாகாத்தான் இருக்கும் என்கின்றனர் கேரள அரசியல் பிரமுகர்கள்.
கடந்த முறை அமேதி, வயனாட்டில் போட்டியிட்டு ஒன்றில் மட்டுமே ராகுலால் ஜெயிக்க முடிந்தது. அமேதியில் ஸ்மிருதி இராணி வெற்றி பெற்றார். இந்த முறை ராகுல் வயனாட்டில் மட்டுமே போட்டியிடுகிறார். கேரளாவில் கோழிக்கோட்டை சேர்ந்த சுரேந்திரன் செல்வாக்கு படைத்தவர். தற்போது 2020 முதல் பா.ஜ., கேரள மாநில தலைவர் பொறுப்பை கவனித்து வருகிறார். சபரிமலையில் இளம்பெண்கள் நுழைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியதில் பிரபலமானார். மேலும் கடந்த தேர்தலில் பத்தினம்திட்டாவில் போட்டியிட்டு 3 இடத்தை பிடித்தார்.
2016 ல் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு 89 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் மட்டுமே தோற்றார். மேலும் இங்கு இடதுசாரி தரப்பில் அன்னிராஜா என்பவரும் போட்டியிடுகிறார். மும்முனை போட்டியில் யார் ஜெயிப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது. வயனாட்டில் ராகுலுக்கு பெரும் சவால்கள் காத்திருக்கிறது என்பது உண்மை.
சசிதரூர் 4வது முறை ஜெயிப்பாரா?
திருவனந்தபுரத்தில் 3 முறை எம்பியாக உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூரே இந்த முறை காங்., தரப்பில் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து மத்திய அமைச்சர் ராஜீவ்சந்திரசேகர் எதிர்த்து போட்டியிடுகிறார். எர்ணாகுளத்தில் ஸ்ரீ சங்கரா சமஸ்கிருத பல்கலை., முன்னாள் துணை வேந்தர் ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். நடிகர் கிருஷ்ணகுமார் கொல்லத்தில் போட்டியிடுகிறார்.

