sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மத்திய பட்ஜெட் - 'ஹைலைட்ஸ்'

/

மத்திய பட்ஜெட் - 'ஹைலைட்ஸ்'

மத்திய பட்ஜெட் - 'ஹைலைட்ஸ்'

மத்திய பட்ஜெட் - 'ஹைலைட்ஸ்'


ADDED : பிப் 01, 2025 11:56 PM

Google News

ADDED : பிப் 01, 2025 11:56 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மத்திய பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்

விவசாயம்


 ↓கிசான் கடன் அட்டை வைத்துள்ள விவசாயி, மீனவர்களுக்கான கடன் உச்ச வரம்பு ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்வு. 7.7 கோடி பேர் பயன்பெறுவர்.

 ↓ஐந்தாண்டுகளில் பருத்தி உற்பத்தியை அதிகரிக்க திட்டம்.

 ↓பருப்பு, எண்ணெய் வித்து உற்பத்தியில் தன்னிறைவு பெற ஆறு ஆண்டு சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்.

 ↓கிராமப்புறங்களில் உள்ள 1.5 லட்சம் தபால் நிலையங்களில், தபால் வங்கிகள் வாயிலாக காப்பீடு, கடன், இ.எம்.ஐ., செலுத்துதல் உள்ளிட்ட வசதிகள் அளிக்கப்படும்.

 ↓அசாமில் யூரியா உற்பத்தி ஆலை துவங்கப்படும். 12.70 லட்சம் டன் உற்பத்தி செய்யப்படும்.

சிறு, குறு, நடுத்தர தொழில்


 ↓நாட்டில் 1 கோடி சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் 7.5 கோடி பேர் பணியாற்றுகின்றனர். நாட்டின் மொத்த உற்பத்தியில் 36 சதவீதம், ஏற்றுமதியில் 45 சதவீதம் இத்துறையைச் சேர்ந்தது.

 ↓முதல்முறை தொழில் துவங்கும் பெண்கள், எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினர் உட்பட 5 லட்சம் பேருக்கு, ரூ. 2 கோடி கடன் ஐந்தாண்டு கால வரம்பில் வழங்கப்படும்.

 ↓'உதயம்' போர்டலில் பதிவு செய்த குறு நிறுவனங்களுக்கு ரூ. 5 லட்சம் வரை கடன் வழங்க, கிரெடிட் கார்டு வழங்கப்படும். 10 லட்சம் பேருக்கு வழங்க இலக்கு.

 ↓காலணிகள் உற்பத்தியை பெருக்க திட்டம். 22 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

 ↓உள்நாட்டில் தயாரிக்கப்படும் பொம்மைகளை ஏற்றுமதி செய்ய நடவடிக்கை.

 ↓சூரிய ஒளி மின்சாரத்திற்கான கருவிகளின் உற்பத்தியை ஊக்குவிக்க புதிய திட்டம்.

 ↓'பி.எம். ஸ்வாநிதி' திட்டத்தின் கீழ் 68 லட்சம் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கிகள் மூலம் கடன், ரூ. 30,000 வரையிலான கடன் அட்டை வழங்கப்படும்.

கல்வி, மருத்துவம்


 ↓நாடு முழுதும் மேல்நிலைப்பள்ளிகள், சுகாதார நிலையங்களுக்கு பாரத் நெட் வாயிலாக பிராட்பேண்ட் இணைய வசதி வழங்கப்படும்.

 ↓மாணவர்களின் ஆராய்ச்சித் திறனை மேம்படுத்த, 50,000 அரசு பள்ளிகளில் 'அடல் டிங்கர்' ஆய்வகம் துவங்கப்படும்.

 ↓நாடு முழுதும் அங்கன்வாடிகள் வாயிலாக 8 கோடி குழந்தைகள், 1 கோடி கர்ப்பிணியருக்கு ஊட்டச்சத்து உணவுகள் தொடர்ந்து வழங்கப்படும்.

 ↓மாணவர்களுக்கான பாடங்களை தாய்மொழியிலேயே டிஜிட்டல் முறையில் வழங்க திட்டம்

 ↓ரூ. 500 கோடி முதலீட்டில் ஏ.ஐ., எனும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மையம் உருவாக்கப்படும்.

 ↓கடந்த 10 ஆண்டுகளில் 1.1 லட்சம் இளநிலை, முதுநிலை மருத்துவ இடங்கள் உருவாக்கப்பட்டன. தற்போது மேலும் 10,000 இடங்கள் அதிகரிக்கப்படும். அடுத்த ஐந்தாண்டுகளில் 75,000 இடங்களாக அதிகரிக்க இலக்கு.

 ↓கடந்த 10 ஆண்டுகளில் 23 ஐ.ஐ.டி.,க்களில் மாணவர்கள் எண்ணிக்கை 65,000த்தில் இருந்து 1.35 லட்சமாக அதிகரிக்கப்பட்டது. கூடுதலாக 2014க்குப் பின் துவங்கப்பட்ட ஐந்து ஐ.ஐ.டி.,களில் வசதிகள் மேம்படுத்தப்படும்.

 ↓அடுத்த மூன்றாண்டுகளில் நாடு முழுதும் மாவட்ட மருத்துவமனைகளிலும் 'கேன்சர் சிகிச்சை மையங்கள்' அமைக்கப்படும். இதில் 2025 - 2026ல் 200 மையங்கள் துவங்கப்படும்.

வளர்ச்சி


 ↓மாநிலங்களுக்கு 50 ஆண்டுகளுக்கு வட்டியில்லாமல் ரூ. 1.5 லட்சம் கோடி கடன் வழங்கப்படும்.

 ↓கிராமங்களில் வீடுகளுக்கு குடிநீர் வழங்குவதை 100 சதவீதம் எட்டுவதற்காக, 2028 வரை ஜல் ஜீவன் திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

 ↓நகர்ப்புற குடிநீர், துாய்மைப் பணிக்கு ரூ. 1 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு.

 ↓'உடான்' திட்டத்தில் 88 விமான நிலையங்களில் 619 இடங்களுக்கு விமானம் இயக்கப்படுகின்றன. கூடுதலாக 120 இடங்களுக்கு விமானம் இயக்கப்படும்.

 ↓பொம்மை தயாரிப்பை அதிகரிக்க சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.

கடல்சார் வளர்ச்சி


 ↓ஆராய்ச்சியில் தனியார் துறையை அதிகரிக்கும் வகையில் ரூ. 20,000 கோடி ஒதுக்கீடு.

 ↓காப்பீடு துறையில் நேரடி அன்னிய முதலீடு 74%ல் இருந்து 100 சதவீதமாக உயர்வு.

 ↓புற்றுநோய் உள்ளிட்ட 36 உயிர் காக்கும் மருந்துகளுக்கு சுங்கவரி முற்றிலும் ரத்து.

 ↓2047க்குள் 100 ஜிகாவாட் அணு மின்சாரம் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 ↓கடல்சார் வளர்ச்சிக்கு ரூ. 25,000 கோடி ஒதுக்கீடு.

 ↓கே.ஒய்.சி., பதிவு எளிமைப்படுத்தப்படும்.

வருமான வரி சலுகை


 ↓ஆண்டு வருமானம் ரூ. 12 லட்சம் வரை வருமான வரி செலுத்தத் தேவையில்லை.

 ↓முதியோருக்கான வருமான வரிக்கழிவு ரூ. 50,000த்தில் இருந்து ரூ. ௧ லட்சமாக அதிகரிப்பு.

 ↓வாடகைக்கான ஆண்டு டி.டி.எஸ்., உச்ச வரம்பு ரூ. 2.40 லட்சத்தில் இருந்து ரூ. 6 லட்சமாக அதிகரிப்பு.

 ↓புதிய வருமான வரி முறை தொடர்பான மசோதா, அடுத்த வாரம் அறிமுகப்படுத்தப்படும்.

 ↓திருத்தப்பட்ட வருமான வரி கணக்கு தாக்கலுக்கான கால அவகாசம் இரண்டு ஆண்டுகளில் இருந்து நான்கு ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us