ADDED : பிப் 01, 2026 12:36 AM
புதுடில்லி: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பார்லி.,யில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.
பட்ஜெட் கூட்டத்தொடர், ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையுடன், கடந்த 28ல் துவங்கியது. இந்நிலையில், 2026 - 27ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை, பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய நிதி அமைச்சருமான நிர்மலா சீதாராமன் இன்று காலை 11:00 மணிக்கு தாக்கல் செய்கிறார்.
இது, அவர் தாக்கல் செய்யும் ஒன்பதாவது பட்ஜெட். இதன் மூலம், தொடர்ச்சியாக ஒன்பது மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் என்ற பெருமையை நிர்மலா சீதாராமன் பெற உள்ளார்.
அது மட்டுமின்றி, 27 ஆண்டுகளுக்கு பின் ஞாயிற்றுக்கிழமையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.
தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம் மற்றும் அசாமில், ஏப்ரலில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளதால், இந்த மாநிலங்களுக்கு பட்ஜெட்டில் சிறப்பு திட்டங்கள், நிதி தொகுப்புகள் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம், நடுத்தர வர்க்கத்தினரை கவரும் வகையில் கவர்ச்சி அறிவிப்புகளும் இடம் பெறலாம் என, கூறப்படுகிறது.

