ADDED : பிப் 14, 2024 05:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முல்பாகல், : முல்பாகல் கோவில்களில், மத்திய சுரங்க துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தனது குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார்.
கோலாருக்கு கட்சி பணிகளுக்காக வந்த மத்திய சுரங்க துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தனது குடும்பத்தினருடன் முல்பாகலில் பிரசித்தி பெற்ற பல்வேறு கோவில்களில் சுவாமி தரிசனம் செய்தார்.
குருடுமலை மஹா கணபதி, ஈஸ்வரன் கோவில், கொலதேவி கிராமம் கோதண்டராமர் கோவில், லட்சுமி நரசிம்மர் கோவில்களில் சுவாமி தரிசனம் செய்தார். இதனை தொடர்ந்து பாதராயர் மடத்திற்கு சென்று மடாதிபதிகளிடம் ஆசிப் பெற்றார். கோலார் பா.ஜ., - எம்.பி., முனிசாமி உடன் சென்றிருந்தார்.

