sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

நாட்டின் வளர்ச்சியை கட்டமைக்கும் சக்தி: இளைஞர் சமுதாயம் குறித்து மத்திய அமைச்சர் எல்.முருகன் பெருமிதம்

/

நாட்டின் வளர்ச்சியை கட்டமைக்கும் சக்தி: இளைஞர் சமுதாயம் குறித்து மத்திய அமைச்சர் எல்.முருகன் பெருமிதம்

நாட்டின் வளர்ச்சியை கட்டமைக்கும் சக்தி: இளைஞர் சமுதாயம் குறித்து மத்திய அமைச்சர் எல்.முருகன் பெருமிதம்

நாட்டின் வளர்ச்சியை கட்டமைக்கும் சக்தி: இளைஞர் சமுதாயம் குறித்து மத்திய அமைச்சர் எல்.முருகன் பெருமிதம்


ADDED : ஜன 10, 2026 07:32 PM

Google News

ADDED : ஜன 10, 2026 07:32 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: நாட்டின் வளர்ச்சியை கட்டமைக்கும் சக்தி, இளைஞர் சமுதாயத்தினரிடமே உள்ளது என்று மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வள அமைச்சகம், தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் இணை அமைச்சர் எல்.முருகன் கூறினார்.

அவரது அறிக்கை:

பிரதமர் மோடி வழிகாட்டுதலின்படி, 2047-ஆம் ஆண்டிற்குள் வளர்ச்சியடைந்த பாரதத்தை கட்டமைக்கும் நோக்கிலான சீரிய பணிகளோடு நமது மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. அவ்விதம், உலகிலேயே மிகப்பெரும் இளைஞர் சக்தி கொண்ட நமது தேசத்தை, வளர்ச்சி மிக்கதாய் கட்டமைக்கும் வல்லமை இளைய சமுதாயத்தினரிடமே உள்ளது என்பதால், அவர்களுக்கான 'தேசிய இளையோர் திருவிழா' டில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்றது.

மத்திய இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை சார்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள 'வளர்ச்சியடைந்த பாரதத்தில் இளைய தலைவர்கள்' என்ற இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அந்தமான்-நிக்கோபார் தீவுகளில் இருந்து டில்லி வந்துள்ள இளைஞர்களை, எனது இல்லத்தில் சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடினேன். மேலும், தமிழ் மரபு சார்ந்த கலை நிகழ்ச்சிகளுடன், அவர்களோடு இணைந்து இரவு உணவு விருந்தில் கலந்து கொண்டது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

இவ்வாறு எல்.முருகன் அறிக்கையில் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us