பட்ஜெட்டையொட்டி ‛அல்வா கிண்டும் ' நிகழ்வு: மத்திய அமைச்சர் பங்கேற்றார்
பட்ஜெட்டையொட்டி ‛அல்வா கிண்டும் ' நிகழ்வு: மத்திய அமைச்சர் பங்கேற்றார்
ADDED : ஜன 24, 2025 09:38 PM

புதுடில்லி: மத்திய பட்ஜெட் தாக்கலையொட்டி அல்வா கிண்டும் நிகழ்ச்சியை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராம் இன்று (ஜன. 24) துவக்கி வைத்தார்.
பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடர், வரும் 31ல் துவங்குகிறது. அன்று லோக்சபா மற்றும் ராஜ்யசபா கூட்டுக் கூட்டத்தில், ஜனாதிபதி திரவுபதி முர்மு உரை நிகழ்த்த உள்ளார்.
தொடர்ந்து 2025-26 ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை பிப்., 1ல், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ளார்.
இதையடுத்து இன்று(24-ம் தேதி) ''அல்வா கிண்டும்'' நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கலந்து கொண்டு பட்ஜெட் தயாரிப்பு பணியில் ஈடுபட்டு வரும் அதிகாரிகள் அனைவருக்கும் அல்வா விநியோகித்தார்.
இதில் அரசு செயலாளர்கள், உயரதிகாரிகள பட்ஜெட் தயாரித்தல் மற்றும் தொகுத்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் மற்றும் பணியாளர்களும் கலந்து கொண்டனர்.

