sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இந்திய எல்லையில் ஆளில்லா டிரோன்கள்: துப்பாக்கி சூடு நடத்தி விரட்டியடிப்பு

/

இந்திய எல்லையில் ஆளில்லா டிரோன்கள்: துப்பாக்கி சூடு நடத்தி விரட்டியடிப்பு

இந்திய எல்லையில் ஆளில்லா டிரோன்கள்: துப்பாக்கி சூடு நடத்தி விரட்டியடிப்பு

இந்திய எல்லையில் ஆளில்லா டிரோன்கள்: துப்பாக்கி சூடு நடத்தி விரட்டியடிப்பு


ADDED : ஜன 12, 2026 03:26 AM

Google News

ADDED : ஜன 12, 2026 03:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: காஷ்மீரின் எல்லைப்பகுதிகளில் ஆளில்லா டிரோன்கள் வட்டமிட்டது. தொடர்ந்து இந்திய ராணுவத்தினர் துப்பாக்கிசூடு நடத்தியதை அடுத்து அவை திரும்பி சென்றன.

இது குறித்து ராணு தரப்பில் தெரிவித்துஇருப்பதாவது:

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் நவுசேரா பகுதியை சேர்ந்த கனியா-கல்சியான் கிராமத்தின் மீது மாலை 6.30 மணியளவிலும், ரஜவுரி மாவட்டத்தில் உள்ள டெரியாத் பகுதியை சேர்ந்த கப்பர் கிராமத்திலும், சம்பா மாவட்டத்திற்கு உட்பட்ட ராமநகர் செக்டாரை சேர்ந்த சக்பாப்ரால் கிராமத்திலும்,பூஞ்ச் பகுதி மாங்கோட் செக்டாரைசேர்ந்த டைன்மபகுதியில் டிரோன்கள் காணப்பட்டது.

உஷராரன இந்திய ராணுவத்தினர் இலகுரக மற்றும் நடுத்தர இயந்திர துப்பாக்கிகள் மூலமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர்.இதனையடுத்து அவைகள் திரும்பி சென்றன. ட்ரோன்கள் எதுவும் சுட்டு வீழ்த்தப்பட்டதா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.மேலும் எல்லைக்கு அருகில் சந்தேகத்திற்கிடமான வகையில் சாட்டிலைட் போன்தொடர்பு கண்டறியப்பட்டது.

ஆபரேஷன் சிந்துர் நடவடிக்கையின் போது இந்தியா பாகிஸ்தானின் பல டிரோன்களைசுட்டு வீழ்கத்தியது.அதன்பிறகு அதன் நடமாட்டம் குறைந்தது. இருப்பினும் பாகிஸ்தான்,. இந்திய படைகளை டிரோன்கள் மூலம் கண்காணிக்க தொடர்ந்து முயற்சிசெய்துவருகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை சர்வதேச எல்லைக்கோடு அருகே உள்ள பலூரா கிராமத்தில் பாகிஸ்தானில் இருந்து வந்தாக கூறப்படும் டிரோன் மூலம் வீசப்பட்ட ஆயுதங்களை பாதுகாப்பு படையினர் மீட்டனர். அதில் இரண்டு கைதுப்பாக்கிகள், 16 தோட்டாக்கள் மற்றும் கையெறி குண்டுகள் இருந்தன.

கடத்தல் மற்றும் ஊடுருவலுக்கு டிரோன்களைப் பயன்படுத்தும் ஒரு புதிய முயற்சியை இந்த சம்பவங்கள் சுட்டிக்காட்டுகிறது. தற்போதைய சூழ்நிலையில் வான் எல்லைப்பகுதி உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருகிறது என பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us