ADDED : பிப் 08, 2025 01:25 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூணாறு:கேரள மாநிலம் மூணாறில் வழக்கத்துக்கு மாறாக உறைபனி ஏற்பட்டது.
மூணாறில் டிசம்பர் இறுதி அல்லது ஜன. 15க்குள் உறைபனி ஏற்படுவது வழக்கம். நடப்பு குளிர் காலத்தில் டிச.24, ஜன.4,5 மற்றும் ஜன.27 ஆகிய நாட்களில் உறைபனி ஏற்பட்டது.
தற்போது மூணாறைச் சுற்றி பல பகுதிகளில் நேற்று குளிர் அதிகரித்தது. செண்டுவாரை எஸ்டேட்டில் காலை குறைந்தபட்ச வெப்ப நிலை ' ஜீரோ' டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகி உறைபனி ஏற்பட்டது.
சைலன்ட்வாலி, தேவிகுளம், லெட்சுமி, நல்லதண்ணி ஆகிய எஸ்டேட் பகுதிகளில் 3 டிகிரி, சிவன்மலை எஸ்டேட் 4 டிகிரி, மாட்டுபட்டி எஸ்டேட் 5 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை பதிவானது. மூணாறுக்கு வெளிநாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ள நிலையில், தற்போது நிலவும் பருவ நிலை அவர்களுக்கு மிகவும் ஏற்றதாக அமைந்தது.