ADDED : ஜூலை 25, 2011 10:12 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
லக்னோ:உ.பி.,யில் ஆளும், பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ., ஒருவர் முலாயம் சிங் தலைமையிலான சமாஜ்வாடியில் உறுப்பினராக, சேர்ந்துள்ளார்.உத்தரப் பிரதேச மாநிலம், ஜலால்பூர் சட்டசபைத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர், ஷெர் பகதூர்சிங்.
சமாஜ்வாடிக் கட்சியின் கொள்கைகளில் ஈர்க்கப்பட்ட இவர், அக்கட்சியின் அடிப்படை உறுப்பினராக, தன்னை இணைத்துக் கொண்டார். பகதூர் சிங்கின் முடிவை பாராட்டியுள்ள சமாஜ்வாடியின் தலைவர் அகிலேஷ் யாதவ்,'அவரது வருகை கட்சிக்கு வலிமை சேர்க்கும்,' என கூறியுள்ளார்.