உ.பி.,யில் கார் மீது லாரி மோதியது; டாக்டர்கள் 5 பேர் பரிதாப பலி
உ.பி.,யில் கார் மீது லாரி மோதியது; டாக்டர்கள் 5 பேர் பரிதாப பலி
UPDATED : நவ 27, 2024 11:50 AM
ADDED : நவ 27, 2024 11:45 AM

லக்னோ: உத்தரபிரதேசத்தில் கார் மீது லாரி மோதிய விபத்தில், டாக்டர்கள் 5 பேர் உட்பட 6 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் கன்னோஜ் மாவட்டத்தில் உள்ள ஆக்ரா-லக்னோ விரைவு சாலையில், அதிவேகமாக சென்று கொண்டிருந்த கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பு சுவரில் மோதி தடுமாறியது. அப்போது அந்த வழியாக வந்த லாரி கார் மீது நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் காரில் பயணித்த 5 டாக்டர்கள் உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் ஒருவர் காயமடைந்தார். இவர் சிகிச்சைக்காக அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
உயிரிழந்தவர்கள் அனைவரும் சாய்பாய் பகுதியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றியவர்கள். லக்னோவில் ஒரு திருமண விழாவில் கலந்துகொண்டு வீடு திரும்பிய போது விபத்து ஏற்பட்டது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.