ADDED : அக் 04, 2024 12:14 AM

பெங்களூரு : தட்சிண கன்னடா உள்ளாட்சியின், மேல்சபை தொகுதியில் நடக்கும் இடைத்தேர்தலுக்கு, எம்.பி., கோட்டா சீனிவாச பூஜாரி தலைமையில், கர்நாடக பா.ஜ., குழு அமைத்துள்ளது.
லோக்சபா தேர்தலில், உடுப்பி - சிக்கமகளூரு தொகுதியில், கோட்டா சீனிவாச பூஜாரி பா.ஜ., வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் எம்.பி.,யானதால், தட்சிண கன்னடா உள்ளாட்சி அமைப்பின் எம்.எல்.சி., பதவியை கோட்டா சீனிவாச பூஜாரி ராஜினாமா செய்தார்.
இவரால் காலியான, மேல்சபையின் ஒரு இடத்துக்கு அக்டோபர் 21ல் இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. பா.ஜ., சார்பில் கிஷோர் குமார் புத்துார், காங்கிரஸ் வேட்பாளராக ராஜு பூஜாரி களமிறங்கி உள்ளனர். இருவரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
மேல்சபை தொகுதியில் நடக்கும் இடைத்தேர்தலுக்கு, எம்.பி., கோட்டா சீனிவாச பூஜாரி தலைமையில், மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா குழு அமைத்துள்ளார்.
தேர்தல் பொறுப்பாளராக கோட்டா சீனிவாச பூஜாரி, துணை பொறுப்பாளர்களாக எம்.எல்.ஏ., ராஜேஷ் நாயக், எம்.எல்.சி., பிரதாப் சிம்ஜா நாயக் நியமிக்கப்பட்டுள்ளனர்.

