sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 21, 2026 ,மாசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கடற்படைக்கு அமெரிக்க ஏவுகணை

/

கடற்படைக்கு அமெரிக்க ஏவுகணை

கடற்படைக்கு அமெரிக்க ஏவுகணை

கடற்படைக்கு அமெரிக்க ஏவுகணை


ADDED : அக் 09, 2024 01:24 AM

Google News

ADDED : அக் 09, 2024 01:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி, நம் கடற்படைக்கு, 1,453 கோடி ரூபாய் மதிப்பிலான, எம்.கே., - 54 என்ற 53 இலகுரக நீர்மூழ்கி ஏவுகணைகளை விற்க அமெரிக்கா ஒப்புதல் அளித்துஉள்ளது.

அமெரிக்காவிடம் இருந்து, எம்.கே., - 54 இலகுரக ஏவுகணைகளை நம் கடற்படை ஏற்கனவே வாங்கிஉள்ளது.

நீர்மூழ்கி கப்பல்களில் இருந்து கடலுக்கு அடியில் இந்த ஏவுகணைகளை செலுத்தி, எதிரி கப்பல்களை துல்லியமாக தாக்க முடியும்.

மேலும், எம்.எச்., - 60ஆர் ஹெலிகாப்டர்களில் பொருத்தியும் இந்த ஏவுகணைகளை செலுத்த முடியும்.

அதிக திறன் உடைய இந்த வகை ஏவுகணையை அமெரிக்காவிடம் இருந்து வாங்க, மத்திய அரசு கோரிக்கை விடுத்திருந்தது.

மொத்தம் 1,453 கோடி ரூபாய் செலவில், 53 ஏவுகணைகளை வாங்க முடிவு செய்யப்பட்டு இருந்தது.

இந்த கோரிக்கையை ஏற்ற அமெரிக்க ராணுவ பாதுகாப்பு ஒத்துழைப்பு முகமை, எம்.கே., -- 54 இலகுரக ஏவுகணையை இந்தியாவுக்கு விற்க நேற்று ஒப்புதல் அளித்துள்ளதாக, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.






      Dinamalar
      Follow us