ADDED : ஜூன் 13, 2025 01:54 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அகமதாபாத்: நெஞ்சை உலுக்கிய அகமதாபாத் விமான விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 241 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
விபத்து மீட்புப் பணிகள் நேற்று (ஜூன் 12) நள்ளிரவு வரை நீடித்தது. இந்நிலையில் விமான விபத்தில் மத்திய அரசுக்கு உதவுவதற்காக, அமெரிக்காவின் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரிய அதிகாரிகள் இந்தியா விரைந்துள்ளனர்.
அவர்களுக்கு தேவையான தொழில்நுட்ப ஆதரவை அமெரிக்க விமான போக்குவரத்து ஆணையமான எப்.ஏ.ஏ., வழங்குவதாக தெரிவித்து உள்ளது.

