பசுமை பட்டாசுகளை பயன்படுத்துங்கள்! சித்தராமையா எச்சரிக்கை
பசுமை பட்டாசுகளை பயன்படுத்துங்கள்! சித்தராமையா எச்சரிக்கை
ADDED : அக் 27, 2024 10:59 PM
பெங்களூரு: ''தீபாவளிக்கு பசுமை பட்டாசு மட்டுமே பயன்படுத்த வேண்டும். இதை மீறுவோர் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்யப்படும்,'' என, முதல்வர் சித்தராமையா எச்சரித்தார்.
பெங்களூரின் கிருஷ்ணா அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர்கள், மாவட்ட பஞ்சாயத்து தலைமை செயல் நிர்வாக அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகளுடன் காணொலிக் காட்சி மூலம், முதல்வர் சித்தராமையா நேற்று ஆலோசனை நடத்தினார்.
அவர் பேசியதாவது:
தீபாவளி பண்டிகையின்போது, பசுமை பட்டாசுக்கு மட்டும் பயன்படுத்த அனுமதி அளிக்க வேண்டும். மாவட்ட கலெக்டர்கள், மாவட்ட எஸ்.பி.,க்கள் இது தொடர்பாக, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இரவு 8:00 முதல் 10:00 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்படும். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் பட்டாசுகளுக்கு, அனுமதி அளிக்கப்படாது.
வேறு பட்டாசுகளை பயன்படுத்தி, விதிகளை மீறுவோர் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்யப்படும்.
பட்டாசு சேகரித்து வைத்துள்ள இடங்களில், அசம்பாவிதங்களை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்விஷயத்தில், அதிகாரிகள் விழிப்புடன் இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

