ஹத்ராஸ் பகுதிக்கு இன்று உத்தர பிரதேச முதல்வர் வருகை
ஹத்ராஸ் பகுதிக்கு இன்று உத்தர பிரதேச முதல்வர் வருகை
UPDATED : ஜூலை 03, 2024 10:49 AM
ADDED : ஜூலை 03, 2024 02:02 AM

ஹத்ராஸ்: உத்தர பிரதேசத்தில் ஹத்ராஸ் பகுதியில் முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று பார்வையிடுகிறார் .
உத்தர பிரதேசத்தில், ஹத்ராஸ் மாவட்டத்தின் சிகந்த்ரா ராவ் பகுதியில் உள்ள புல்ராய் என்ற கிராமத்தில் போலே பாபா என்பவரின் ஆன்மிக சொற்பொழிவு கூட்டம் நேற்று நடந்தது. போலே பாபா பேசி முடித்ததும், கூட்டத்தில் பங்கேற்றவர்கள் ஒருவரையொருவர் முண்டியடித்துக் கொண்டு வெளியேறினர். இதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, பெண்கள், குழந்தைகள் உட்பட, 116 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சம்பவம் நடந்த இடத்தினை அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று பார்வையிடுகிறார்.
யார் இந்த போலே பாபா
நாராயண் ஹரி, உ.பி.,யின் எட்டா மாவட்டத்தின் பகதுார் நகரி கிராமத்தில் பிறந்தார். கல்லுாரி படிப்புக்குப் பின், உ.பி., காவல் துறையின் உளவுப்பிரிவில் பணியாற்றிய அவர், ஆன்மிக ஈடுபாடு காரணமாக, 2006ல், விருப்ப ஓய்வு பெற்றார். உ.பி.,யின் பல்வேறு இடங்களுக்கு சென்று ஆன்மிகத்தை பரப்பிய அவர், தன் சொந்த கிராமத்தில் ஆசிரமத்தை கட்டினார். உ.பி.,யின் மேற்கு பகுதியில் மிகவும் பிரபலமான போலே பாபாவின் பேச்சைக் கேட்க, வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் வருகின்றனர். வெள்ளை நிற குர்தா, பேன்ட் அணியும் அவர், தன் மனைவியுடன் அமர்ந்து, சொற்பொழிவு ஆற்றி வருகிறார்.