தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ முழு கல்வியறிவு :சாதித்தது உத்தரகண்ட்

முழு கல்வியறிவு :சாதித்தது உத்தரகண்ட்

முழு கல்வியறிவு :சாதித்தது உத்தரகண்ட்


UPDATED : ஜூலை 09, 2026 08:45 PM

ADDED : ஜூலை 09, 2026 08:21 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 09, 2026 08:45 PM ADDED : ஜூலை 09, 2026 08:21 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

டேராடூன்:நாட்டின் முழு கல்வியறிவு பெற்ற ஆறாவது மாநிலம் என்ற பெருமையை உத்தரகண்ட் பெற்றுள்ளது. தற்போதைய நிலவரப்படி இம்மாநிலத்தின் எழுத்தறிவு விகிதம் 98 சதவீதத்தை கடந்து இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசின் தேசிய கல்வி கொள்கை மற்றும் 'உல்லாஸ்' எனப்படும் 'சமூகத்தில் உள்ள அனைவருக்கும் வாழ்நாள் முழுதும் கற்றலை உணர்தல்' என்ற திட்டத்தின்படி பல்வேறு மாநிலங்களில் வயது வந்தோருக்கு கல்வியறிவு புகட்டப்பட்டு வருகிறது. அதன்படி மத்திய கல்வி அமைச்சகத்தின் பள்ளி கட்டமைப்பு மற்றும் எழுத்தறிவு துறை நிர்ணயித்த, வயது வந்தோருக்கான எழுத்தறிவு இலக்கை உத்தரகண்ட் மாநிலம் சமீபத்தில் எட்டியது.

இதையடுத்து இம்மாநிலத்தை முழு கல்வியறிவு பெற்றதாக அறிவிக்கும் திட்ட வரைவுக்கு கவர்னர் குர்மீத் சிங் அதிகாரப்பூர்வமாக நேற்று ஒப்புதல் அளித்தார். இதற்கு முன், நம் நாட்டின் மிசோரம், கோவா, திரிபுரா, ஹிமாச்சல பிரதேசம் மற்றும் சிக்கிம் ஆகிய ஐந்து மாநிலங்கள் முழு எழுத்தறிவு நிலையை எட்டியிருந்தன. இந்த பட்டியலில், தற்போது ஆறாவது மாநிலமாக உத்தரகண்ட் இணைந்து சாதனை படைத்துள்ளது. தற்போதைய நிலவரப்படி உத்தரகண்டின் எழுத்தறிவு விகிதம் 98 சதவீதத்தை கடந்து இருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த வரலாற்று சாதனையை மாநிலத்தின் 'புதிய மைல்கல்' என குறிப்பிட்ட, பா.ஜ.,வைச் சேர்ந்த உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, 'அரசின் தொடர் முயற்சிக்கும், பொதுமக்களின் ஒத்துழைப்பும் தான் இந்த வெற்றிக்கு முழு காரணம்' என புகழ்ந்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us