ADDED : ஏப் 24, 2025 04:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நான்கு நாட்கள் அரசு முறை பயணமாக நம் நாட்டுக்கு வந்துள்ள அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், தொலைபேசியில் நேற்று பிரதமர் மோடியை அழைத்து, பஹல்காம் தாக்குதலுக்கு இரங்கல் தெரிவித்தார்.
இந்த கடினமான நேரத்தில் இந்திய மக்களுடன் அமெரிக்கா துணை நிற்பதாக பிரதமர் மோடியிடம் கூறிய அவர், பயங்கரவாதத்திற்கு எதிரான கூட்டுப் போராட்டத்தில் அனைத்து உதவிகளையும் வழங்க தயாராக உள்ளதாக உறுதி அளித்தார்.

