மோடி டீ குடித்ததால் திடீர் பிரபலமான வாரணாசி டீக்கடை
மோடி டீ குடித்ததால் திடீர் பிரபலமான வாரணாசி டீக்கடை
UPDATED : மே 30, 2024 04:27 PM
ADDED : மே 30, 2024 04:26 PM

வாரணாசி: கடந்த 2022ம் ஆண்டு வாரணாசி வந்தபோது பிரதமர் மோடி, டீ அருந்திய கடை பிரபலமாகி உள்ளது. கடையை பார்ப்பதற்கு என்றே ஏராளமானோர் வருகின்றனர்.
உ.பி., மாநிலத்தில் உள்ள வாரணாசியில் அஸ்சி கார்ட் பகுதியில் உள்ள டீக்கடை தான் ' பப்பு சாய் கடை' இந்த டீக்கடையை மூன்றாவது தலைமுறையாக தாத்தா, அப்பா தற்போது பேரன் சதீஷ் நடத்தி வருகிறார். 85 வருடங்களாக நடத்தப்பட்டு வரும் இந்த டீக்கடையில் ஒரு நாளைக்கு 200 முதல் 500 நபர்கள் வரை வந்து டீ அருந்திவிட்டு செல்கின்றனர். 2022 ல் வாரணாசி வந்த பிரதமர் முதல்முறையாக இந்த டீக்கடைக்கு வந்து ஒரே நேரத்தில் மூன்று டீ அருந்தினார்.
பாய்லர் பால் டீ யும் தயாரிக்கப்பட்டு கொடுக்கப்படுகிறது. எந்த டீயாக இருந்தாலும் விலை 15 ரூபாய் என்று நிர்ணயம் செய்துள்ளனர். எப்பகுதியில் இருந்தும் பப்பு சாய் கடைக்கு செல்ல வேண்டும் என்றால் ஆட்டோக்காரர்கள் ரிக்ஷா என யாரிடம் சொன்னாலும் போதும் கடைக்கு அழைத்து வந்து விடுகின்றனர். அத்தனை புகழ்பெற்ற கடையாக வாரணாசி முழுவதும் பரவி உள்ளது. ஒருமுறை இவர் தந்தையை டில்லிக்கு அழைத்து பிரதமரே பாராட்டி உள்ளார்.
நீங்களும் காசிக்கு ஒருமுறை வந்தால் இங்கு வந்து, தற்போது டீ மாஸ்டராக, மேலாளராக, முதலாளியாக கேசியராக என பல்வேறு பரிமாணங்களில் அனைத்து பணிகளும் ஒருவரே கவனித்துக் கொள்ளும் சதீஷை பார்த்து டீ அருந்திவிட்டு வாழ்த்தி விட்டுச் செல்லலாம்