நிதி செயலர் பலியான வழக்கில் ஜாமின் மனு மீது 27ல் தீர்ப்பு
நிதி செயலர் பலியான வழக்கில் ஜாமின் மனு மீது 27ல் தீர்ப்பு
ADDED : செப் 26, 2025 01:46 AM
கன்டோன்மென்ட் : விபத்தில் நிதித்துறையின் துணைச் செயலர் உயிரிழந்த வழக்கில் பி.எம்.டபுள்யூ., காரை ஓட்டி வந்த ககன் ப்ரீத் கவுரின் ஜாமின் மனு மீதான தீர்ப்பை டில்லி நீதிமன்றம் சனிக்கிழமைக்கு ஒத்திவைத்தது.
டில்லி நிதித்துறையில் துணைச் செயலராக பணியாற்றி வந்தவர் நவ்ஜோத் சிங், 52. தன் மனைவியுடன் நவ்ஜோத் சிங் கடந்த 14ம் தேதி கோவிலுக்குச் சென்று விட்டு, பைக்கில் வீட்டுக்கு திருப்பிக் கொண்டிருந்தார்.
டில்லி கன்டோன்மென்ட் மெட்ரோ ரயில் நிலையம் அருகே வட்டச்சாலையில் வந்து கொண்டிருந்தபோது, படுவேகமாக வந்த பி.எம்.டபுள்யூ., கார் ஒன்று பைக் மீது மோதியது.
விபத்தில் நவ்ஜோத் சிங்கும் அவரது மனைவியும் படுகாயமடைந்தனர். இதில் நவ்ஜோத் சிங் உயிரிழந்தார். பி.எம்.டபுள்யூ., காரை ஓட்டி வந்த ககன் ப்ரீத் கவுர், 38, கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கில் ஜாமின் கேட்டு, டில்லி நீதிமன்றத்தில் கவுர் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. மனுவை விசாரித்து வந்த மாஜிஸ்திரேட் அங்கித் கார்க், தீர்ப்பை சனிக்கிழமைக்கு நேற்று ஒத்திவைத்தார்.