17 ஆண்டுகள் இழுத்தடிக்கப்பட்ட மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு ?
17 ஆண்டுகள் இழுத்தடிக்கப்பட்ட மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு ?
ADDED : ஜூலை 31, 2025 03:19 AM

மும்பை: மலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மஹாராஷ்டிராவின் நாசிக் மாவட்டத்தில் உள்ள மாலேகான் என்ற இடத்தில், 2008 செப்., 29ல் பயங்கர குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதில் ஆறு பேர் உயிரிழந்தனர்; 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இது தொடர்பாக, பா.ஜ., முன்னாள் எம்.பி., பிரக்யா சிங் தாக்குர், லெப்டினன்ட் கர்னல் பிரசாத் புரோஹித் சமீர் குல்கர்னி, ராஜா ரஹீர்கர்,, சுவாமி அம்ரூதானந்த், சுதாகர் சதூர்வேதி உள்ளிட்ட ஏழு பேர் மீது, சட்ட விரோத தடுப்பு நடவடிக்கைகள் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
இந்த வழக்கு விசாரணை, மும்பையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதில் பிரக்யா சிங் தாக்கூர் உட்பட, குற்றம் சாட்டப்பட்ட அனைவரும், ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். மொத்தமுள்ள, 323 சாட்சிகளில், 130 பேரிடம், விசாரணை கடந்த ஏப்ரலில் முடிவடைந்து விட்டது.
17 ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்டு வந்த இந்த வழக்கினை சிறப்பு நீதிபதி ஏ.கே.லஹோட்டி விசாரணை நடத்தி தீர்ப்பு வெளியிட உள்ளார். . முன்னதாக ஜாமினில் உள்ள 7 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாக இந்த வழக்கினை விசாரணை நடத்தி வந்த நீதிபதி ஏ.கே.லஹோட்டி திடீரென , நாசிக் மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்து மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.