பீஹாரில் முதல்வரை விட துணை முதல்வர் சொத்து மதிப்பு உயர்வு
பீஹாரில் முதல்வரை விட துணை முதல்வர் சொத்து மதிப்பு உயர்வு
ADDED : ஜன 01, 2024 09:40 PM

பாட்னா: பீஹார் முதல்வர் நிதிஷ்குமாரின் அசையும், அசையா சொத்துக்களின் மதிப்பு, துணை முதல்வர் தேஜாஸ்வி யாதவின் அசையும், அசையா சொத்துக்களின் மதிப்பு மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பீஹாரில் முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் தங்களின் அசையும் , அசையா சொத்துக்கணக்கை அமைச்சரவை செயலக இணையதளத்தில் ஆண்டு தோறும் வெளியிட்டு வருகின்றனர். இதன்படி 2022-2023 ம்ஆண்டு நிதியாண்டிற்கான சொத்து விவரங்களில் பீஹார் முதல்வரின் அசையா சொத்து மதிப்பு ரூ. 1.48 கோடி, அசையும் சொத்து ரூ. 16.84 லட்சம் என மொத்த சொத்து மதிப்பு ரூ. 1. 64 கோடி என தெரியவந்துள்ளது.
இதையடுத்து துணை முதல்வரான தேஜாஸ்வி யாதவ், அசையா சொத்து மதிப்பு ரூ. 3 கோடி எனவும், அசையும் சொத்து மதிப்பு ரூ.1.11 கோடி என மொத்தம் ரூ. 4 கோடி எனவும் இவரது சகோதரர் தேஜ்பிரதாப் யாதவ் சொத்து மதிப்பு ரூ. 1.79 கோடி எனவும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் முதல்வர் நிதிஷ்குமாரை விட துணை முதல்வர் தேஜாஸ்வி யாதவ் சொத்து மதிப்பு மூன்று மடங்கு உயர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.