ADDED : ஜூலை 21, 2025 09:55 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: மருத்துவ காரணங்களுக்காக, துணை ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்வதாக ஜக்தீப் தன்கர் அறிவித்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு அனுப்பி உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஜக்தீப் தன்கர் ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:
மருத்துவர்களின் அறிவுரையின் படி, இந்திய அரசியலமைப்பின் பிரிவு 67(ஏ) இன் படி, எனது பதவியை ராஜினாமா செய்யும் முடிவை எடுத்துள்ளேன். ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள் உள்ளிட்டோருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன். ஜனாதிபதியின் அசைக்க முடியாத ஆதரவிற்கும், அவர்கள் பகிர்ந்து கொண்ட நல்லுறவுக்கும் நன்றி.
பிரதமரின் ஒத்துழைப்பும், ஆதரவும் விலைமதிப்பற்றது, அவருடன் பதவியில் இருந்த காலத்தில் நிறைய கற்றுக்கொண்டேன்.
இவ்வாறு ஜக்தீப் தன்கர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.