ADDED : மே 02, 2025 12:46 AM

மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு போதுமான நிதியை மத்திய அரசு ஒதுக்க வேண்டும். மேலும், ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு காலக்கெடு நிர்ணயிக்க வேண்டும். ஒருவழியாக, ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த மத்திய அரசு ஒப்புக் கொண்டுஉள்ளது. இது, காங்கிரசுக்கு கிடைத்த வெற்றி.
மல்லிகார்ஜுன கார்கே
தேசிய தலைவர், காங்.,
பிரதமர் மோடிக்கு நன்றி!
ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என, மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி. எதிர்க்கட்சிகளின், 'இண்டி' கூட்டணியை பொறுத்தவரை, சமூக நீதி என்பது, அரசியல் கருவி போன்றது. ஆனால் தே.ஜ., கூட்டணிக்கு, சமூக நீதி என்பது உறுதிப்பாடு.
அனுப்ரியா படேல்
மத்திய இணை அமைச்சர்,
அப்னா தளம் சோனேலால்
காலத்தின் கட்டாயம்!
மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தவில்லை. இந்த விவகாரத்தில் அக்கட்சி இரட்டை வேடம் போடுகிறது. தற்போது, ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த தே.ஜ., கூட்டணி அரசு முடிவு செய்துஉள்ளது. இது காலத்தின் கட்டாயம்.
சிராக் பஸ்வான்
மத்திய அமைச்சர்,
லோக் ஜனசக்தி ராம்விலாஸ்

