ADDED : ஜூலை 12, 2025 06:32 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோட்டா : நாடு சுதந்திரம் அடைந்து, 78 ஆண்டுகளுக்குப் பின், ராஜஸ்தானின் மலைக்கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின மக்களுக்கு மின்சாரம் கிடைத்திருக்கிறது.
ராஜஸ்தானில் பரன் மாவட்டத்தில், பழங்குடியினர் வாழும் மலைக்கிராமத்தில், நாடு சுதந்திரம் பெற்றதில் இருந்தே மின்சார வசதி வழங்கப்படவில்லை. இங்கு, 40 வீடுகள் உள்ளன. சஹாரியா பழங்குடியினத்தை சேர்ந்த 200 பேர் வசிக்கின்றனர். மின்சாரம் இல்லாதது குறித்து மாவட்ட கலெக்டரிடம் மக்கள் முறையிட்டனர்.
இதையடுத்து, பழங்குடியின மக்களின் சமூக பொருளாதார நிலைமைகளை மேம்படுத்தும் பிரதமர் ஜன்மான் திட்டத்தின் கீழ் அந்த கிராமத்துக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக கலெக்டர் ரோஹிதாஷ்வ சிங் தோமர் கூறினார். இதையடுத்து,பரன் மாவட்டம் 100 சதவீத மின்சார இணைப்பை பெற்றுள்ளது.