UPDATED : ஜன 30, 2024 09:22 PM
ADDED : ஜன 30, 2024 09:17 PM

இம்பால்: மணிப்பூரில் இன்று (30.01.2024) இரு கிராமத்தில் வசிக்கும் இருவேறு சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக வெடித்ததில் 2 பேர் கொல்லப்பட்டனர் .பலர் காயமடைந்தனர்.
மணிப்பூரில் வன்முறை சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன. இரு பிரிவினரிடையே மோதல் காரணமாக அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இன்று (30.01.2024) மணிப்பூரின் மேற்கு மாவட்டங்களான கவுட்ரக் கிராமத்தைச்சேர்ந்த ஒரு சமூகத்தினருக்கும், கங்கோகிப் கிராமத்தைச் சேர்ந்த மற்றொரு சமூகத்தினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக வெடித்தது.
இதில் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவத்தில் பா.ஜ.,இளைஞர் உள்பட இருவர் துப்பாக்கிச்சூட்டில் பலியாயினர். பலர் காயமடைந்தனர். இரவை தாண்டியும் வன்முறை நீடிப்பதால் இரு கிராமங்களிலும் பதற்றம் அதிகரித்து வருகிறது. போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என செய்திகள் வெளியாகியுள்ளன.