sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இந்திய அணி அபார பந்துவீச்சு… ஆரம்பமே தென்ஆப்ரிக்காவுக்கு சறுக்கல்

/

இந்திய அணி அபார பந்துவீச்சு… ஆரம்பமே தென்ஆப்ரிக்காவுக்கு சறுக்கல்

இந்திய அணி அபார பந்துவீச்சு… ஆரம்பமே தென்ஆப்ரிக்காவுக்கு சறுக்கல்

இந்திய அணி அபார பந்துவீச்சு… ஆரம்பமே தென்ஆப்ரிக்காவுக்கு சறுக்கல்

1


UPDATED : நவ 30, 2025 08:01 PM

ADDED : நவ 30, 2025 05:45 PM

Google News

UPDATED : நவ 30, 2025 08:01 PM ADDED : நவ 30, 2025 05:45 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராஞ்சி: தென்னாப்ரிக்க அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சிறப்பாக பந்துவீசி வருகிறது. அந்த அணியின் முன்னணி வீரர்கள் விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி மூன்று போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி இன்று (நவ.,30) ராஞ்சியில் நடைபெற்றது. 'ரெகுலர்' கேப்டன் சுப்மன் கில் (கழுத்து), துணைக் கேப்டன் ஷ்ரேயஸ் (மண்ணீரல்) காயத்தால் விலகிய நிலையில் இந்திய அணிக்கு ராகுல் கேப்டனாக களமிறங்கினார். ஒருநாள் போட்டியில் ருத்துராஜ் கெய்க்வாட், 712 நாட்களுக்கு பிறகு இந்திய அணியில் இடம் பிடித்தார்.

தொடர்ந்து ஜெய்ஸ்வால், பிரசித் கிருஷ்ணா ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது. 'டாஸ்' வென்ற தென் ஆப்ரிக்க முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. துவக்க வீரர்களாக ரோகித், ஜெய்ஸ்வால் ஆகியோர் களமிறங்கினர். தென் ஆப்ரிக்க வீரர் நந்த்ரே பந்தில் ஜெய்ஸ்வால் (18) ரன்னில் வெளியேறினார். பின்னர் ரோகித்துடன் ஜோடி சேர்ந்த விராட் கோலி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால், அணியின் ரன் அதிகரித்தது.

ஒருநாள் போட்டியில் தனது 60வது அரை சதத்தை பதிவு செய்த ரோகித், (57) ஆட்டமிழந்தார். ருதுராஜ், (8) ரன்களில் வந்த வேகத்தில் வெளியேறினார். தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் (13) பிரகாசிக்கவில்லை. அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி, 120 பந்துகளில் 135 ரன்கள் எடுத்து அசத்தினார். கேப்டன் கே.எல்.ராகுல் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய 56 பந்துகளில் 60 ரன்களில் எடுத்து உதவினார்.

தொடர்ந்து பாஷ் பந்தில் ஜடேஜா 32, அர்ஷ்தீப் 0 ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஹர்ஷித் ராணா 3, குல்தீப் 0 ரன் எடுத்திருந்த நிலையில், 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பு 349 ரன்கள் குவித்தது.

350 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய தென்னாப்ரிக்க அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. ரிக்கெல்டன், டிகாக் ஆகியோர் ஹர்ஷித் ரானா பந்துவீச்சில் அடுத்தடுத்து டக் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தனர். அதன்பிறகு, கேப்டன் மார்க்ரம் 7 ரன்னில் ஆட்டமிழந்தார்.

ஜோர்ஷி (39), பிரேவிஷ் (37) ஓரளவுக்கு பங்களிப்பை கொடுத்தனர். ப்ரீட்ஸ்கே மட்டும் மறுமனையில் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார். அந்த அணி 26 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 177 ரன் எடுத்துள்ளது.

கோலி ரன் மழை!

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 352 சிக்சர்கள் அடித்து ரோகித் சர்மா முதலிடம்; பாக்., வீரர் ஷாஹித் அப்ரிடி 351 இரண்டாம் இடம் பிடித்தார். சர்வதேச போட்டிகளில் அதிக முறை இணைந்து விளையாடிய இணை என்ற ரோகித் சர்மா - விராட் கோலி சாதனை படைத்துள்ளனர். ஒருநாள் போட்டியில் விராட் கோலி 52வது சதம் அடித்தார். மூன்று வித போட்டிகளிலும் அதிக சதமடித்து (83) விராட் கோலி 2வது இடத்தில் உள்ளார்.








      Dinamalar
      Follow us