காஷ்மீரில் 370வது சட்டப்பிரிவு ரத்தால் தான் ஓட்டு சதவீதம் அதிகரிப்பு: அமித்ஷா
காஷ்மீரில் 370வது சட்டப்பிரிவு ரத்தால் தான் ஓட்டு சதவீதம் அதிகரிப்பு: அமித்ஷா
ADDED : மே 14, 2024 02:14 PM

புதுடில்லி: ஜம்மு காஷ்மீரில் 370வது சட்டப்பிரிவை ரத்து செய்யப்பட்டதன் மூலம் ஓட்டுப்பதிவு சதவீதம் அதிகரித்துள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370ஐ 2019ல் பா.ஜ., அரசு ரத்து செய்தது. ஓட்டுப்பதிவு சதவீதம் அதிகரிப்பதன் மூலம், 370வது சட்டப்பிரிவு ரத்து செய்ததை, எதிர்த்தவர்களுக்கு, அமித் ஷா தகுந்த பதிலடி கொடுத்துள்ளார்.
இது குறித்து அவர் எக்ஸ் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 4வது கட்ட தேர்தலில், ஓட்டுப்பதிவு நடந்த ஸ்ரீநகர் லோக்சபா தொகுதியில் 36.88 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளன. 370வது சட்டப்பிரிவை ரத்து செய்யப்பட்டதன் மூலம் ஓட்டுப்பதிவு சதவீதம் அதிகரித்துள்ளது.
ஜனநாயகத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை மேம்படுத்துகிறது. ஸ்ரீநகரில் 2019 லோக்சபா தேர்தலில் 14.43 சதவீதமும், 2014ல் 25.86 சதவீதமும், 2009ல் 25.55 சதவீதமும், 2004ல் 18.57 சதவீதமும் பதிவாகியுள்ளன. இவ்வாறு அந்த அறிக்கையில் அமித்ஷா கூறியுள்ளார்.

