ADDED : ஜன 25, 2026 11:41 PM

ஓட்டளிப்பது அரசியலமைப்பு உரிமை; தேசியக் கடமையும் கூட. இது, மக்கள் பங்கேற்பின் மிக முக்கிய திருவிழா. உங்கள் ஒற்றை ஓட்டு, இந்தத் தேசத்தின் எதிர்காலம், சமூக முன்னேற்றம் மற்றும் ஜனநாயகத்தின் ஸ்திரத்தன்மைக்கு அடித்தளம். வரும் தேர்தல்களில், 100 சதவீத ஓட்டுப்பதிவை உறுதி செய்யுங்கள்.
யோகி ஆதித்யநாத் உ.பி., முதல்வர், பா.ஜ.,
ஏ.ஐ., தொழில்நுட்பத்தின் முன்னோடி!
ஒடிஷா மாநிலம் , ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் முன்னோடியாக திகழ இலக்கு நிர்ணயித்துள்ளோம். அரசின் ஆளுமை மற்றும் பொது சேவை அளிப்பதில் புதிய அளவுகோல்களை நிர்ணயிப்போம். பாதுகாப்பான, அனைவரையும் உள்ளடக்கிய சூழலமைப்பை உருவாக்குவோம்.
மோகன் சரண் மஜி ஒடிஷா முதல்வர், பா.ஜ.,
கடும் நடவடிக்கை!
வங்கதேசத்தைச் சேர்ந்த சட்டவிரோத குடியேறிகள் 15 பேர், அசாமில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டனர். அவர்கள் விருப்பப்படி வந்தாலும், நிபந்தனைகளின்படி சொந்த நாட்டிற்கு திரும்ப வேண்டும். ஊடுருவல்காரர்களுக்கு எதிராக மாநில அரசு தொடர்ந்து கடும் நடவடிக்கை எடுக்கும்.
ஹிமந்த பிஸ்வ சர்மா அசாம் முதல்வர், பா.ஜ.,

