வாழ்க்கையில் மோட்சம் வேண்டுமா।? மஹாலட்சுமி கோவில் போகலாம்!
வாழ்க்கையில் மோட்சம் வேண்டுமா।? மஹாலட்சுமி கோவில் போகலாம்!
ADDED : நவ 19, 2024 06:43 AM

கர்நாடகா- எல்லையில், மஹாராஷ்டிராவில் கோலாப்பூர் என்ற இடத்தில் அமைந்துள்ளது மஹாலட்சுமி கோவில்.
இந்த கோவிலை அம்பாபாய் மந்திர் என்று பக்தர்கள் அழைக்கின்றனர். இந்த கோவிலின் அன்னையாக மஹாலட்சுமி, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கோவில் சாளுக்கிய ஆட்சியில் கர்ண தேவனால் கட்டப்பட்டது. அம்மனின் மூர்த்தி, ரத்தினத்தால் ஆனது. 40 கிலோ எடை கொண்டது.
கோவிலில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 3 அடி உயர மஹாலட்சுமி உருவம் உள்ளது. கோவில் சுவரில் ஸ்ரீ யந்திரம் செதுக்கப்பட்டுள்ளது.
கல்லினால் செதுக்கப்பட்ட சிங்கம், சிலைக்கு பின் நிற்கிறது.
மாதுலிங்க பழம், சூலாயுதம், கவசம், பாண பாத்திரம் ஆகியவற்றை கையில் ஏந்தி பக்தர்களுக்கு, மஹாலட்சுமி அருள்பாலிக்கிறார்.
கிர்னோ உற்சவம், ரத உற்சவம், லட்சுமி பூஜை, லலிதா பஞ்சமி, நவராத்திரி, தீபாவளி, வரலட்சுமி விரதம் ஆகியவை இக்கோவிலில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகள். இந்த கோவிலுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.
கோவிலுக்கு சென்று மஹாலட்சுமியை தரிசனம் செய்தால், வாழ்வில் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கும். வாழ்க்கையில் மோட்சம் அடையலாம் என்றும் பக்தர்கள் நம்புகின்றனர்.
கோவிலின் நடை தினமும் அதிகாலை 4:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை திறந்திருக்கும். பெங்களூரில் இருந்து கோலாப்பூருக்கு நேரடி அரசு பஸ் உள்ளது.
மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் இருந்து இரவு 7:05 மணிக்கு கே.எஸ்.ஆர்.டி.சி., ஐராவத் கிளப் பஸ் புறப்படுகிறது. மறுநாள் காலை 6:00 மணிக்கு கோலாப்பூரை சென்றடைகிறது. டிக்கெட் கட்டணம் 1,214 ரூபாய்.

