நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கர்நாடக அரசின் சிறுபான்மையினர் நலத்துறைக்கு உட்பட்டது வக்பு வாரியம். இந்த வாரியத்திற்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து, விவசாயம் செய்ததாக விவசாயிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. சில கோவில்கள், மடங்களும் வக்பு வாரியத்தின் சொத்து என்று கூறப்பட்டது.
இதனை கண்டித்து பா.ஜ., தலைவர்கள் போராட்டம் நடத்தினர். பா.ஜ., - எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால் தலைமையிலான குழு, வடமாவட்டங்களில் விவசாயிகளை சந்தித்து ஆறுதல் கூறினர். பார்லிமென்ட் வக்பு கூட்டு குழு தலைவர் ஜெகதாம்பிகா பாலிடம் அறிக்கையும் சமர்பித்தனர். பிரச்னை வெடித்த நிலையில், விவசாயிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப அரசு தடை விதித்தது.

