sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 04, 2026 ,மாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

 போர் பதற்றம்: தேர்வை ஒத்தி வைத்தது சி.பி.எஸ்.இ.,

/

 போர் பதற்றம்: தேர்வை ஒத்தி வைத்தது சி.பி.எஸ்.இ.,

 போர் பதற்றம்: தேர்வை ஒத்தி வைத்தது சி.பி.எஸ்.இ.,

 போர் பதற்றம்: தேர்வை ஒத்தி வைத்தது சி.பி.எஸ்.இ.,


ADDED : மார் 02, 2026 12:51 AM

Google News

ADDED : மார் 02, 2026 12:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி : மேற்காசிய நாடுகளில் இன்று நடக்கஇருந்த, 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு தேர்வுகளை ஒத்திவைத்த சி.பி.எஸ்.இ., புதிய தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியம் சார்பில், இந்தியா உட்பட உலகெங்கிலும் 26 நாடுகளில், 10 மற்றும் பிளஸ் 2 தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தத் தேர்வை மொத்தம் 43 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் எழுதி வருகின்றனர்.

இந்நிலையில், சி.பி.எஸ்.இ., தேர்வு கட்டுப்பாட்டாளர் சஞ்சன் பரத்வாஜ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

மேற்காசியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் போர் பதற்றம் காரணமாக, இன்று நடைபெறவிருந்த 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு தேர்வுகள் ஒத்திவைக்கப்படுகின்றன.

ஈரான், பஹ்ரைன், குவைத், ஓமன், கத்தார், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளில் இந்த தேர்வுகள் ஒத்திவைக்கப் படுகின்றன.

ஒத்திவைக்கப்படும் பாடங்களுக்கான தேர்வு நடத்தப்படும் தேதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.

அங்கு நிலவும் சூழல் குறித்து நாளை ஆலோசனை நடத்தப்பட்டு, மார்ச் 5ம் தேதி முதல் மீண்டும் தேர்வுகள் நடத்துவது குறித்து முடிவு செய்யப்படும். இவ்வாறு அவ்வாறு கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us