விஜயகாந்த் வந்த போது ஏற்படாத எழுச்சியா? விஜயை விமர்சித்த சீமான்!
விஜயகாந்த் வந்த போது ஏற்படாத எழுச்சியா? விஜயை விமர்சித்த சீமான்!
ADDED : ஆக 05, 2025 01:24 PM

சென்னை: ''அரசியலுக்கு வந்துள்ள விஜய் என்ன மாறுபட்ட கொள்கையை வைத்துள்ளார். விஜயகாந்த் அரசியலுக்கு வந்த போது ஏற்படாத எழுச்சியா,'' என விஜயை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது குறித்து நிருபர்களிடம் சீமான் கூறியதாவது: வட இந்தியர்களுக்கு தமிழகத்தில் ஓட்டுரிமை தரக்கூடாது; நான் இருக்கும் வரை அது நடக்காது. தமிழகத்தை ஹிந்தி பேசும் இன்னொரு மாநிலமாக மாற்றும் முயற்சி நடைபெறுகிறது. 100 நாள் வேலை திட்டத்தை கொடுத்து மக்களை சோம்பேறி ஆக்கி விட்டார்கள்.
100 நாள் வேலை திட்டத்தில் நடப்பட்ட மரக்கன்றுகள் எவ்வளவு? மக்களின் உழைப்பை ஆற்றலாக மாற்ற தவறிவிட்டது. மறுபடிம் இன்னொரு தடவை அதிமுக வந்துவிடவே கூடாது என்று திமுகவுக்கு ஓட்டு போடுகிறான். பிசாசை விவாகரத்து பண்ணிவிட்டு பேயை 5 வருடம் கல்யாணம் செய்கிறான்.
எழுச்சியா?
திரை புகழை தொலைக்காட்சியில் எங்களை காட்டுகிறதை விட அவர்களை காட்டுவது அதிகம். உங்களுக்கு அவர்களை பற்றி செய்தி போட்டால் பார்ப்பார்கள் என்று நினைக்கிறீர்கள். அது தவறு அல்ல. ஆனால் அவர் தத்துவத்தை என்ன விஷயத்திற்கு போராடி வருகிறார் என்று பார்க்க வேண்டும். விஜயகாந்த் அரசியலுக்கு வந்த போது ஏற்படாத எழுச்சியா?
60 வருடம்
அரசியலுக்கு வந்துள்ள விஜய் என்ன மாறுபட்ட கொள்கையை வைத்துள்ளார். திருப்பி அதே ஈவெரா, அண்ணா வழி என்று சொன்னால், திமுகவை வீழ்த்த வேண்டும். அண்ணா வழியில் 60 வருடமாக ஒருவர் போய் கொண்டு இருக்கிறார்.
அவருக்கு பின்னால் போய் எப்படி வீழ்த்த முடியும்.வேறு கொள்கை வைத்து அவருக்கு முன்னாடி போனால் தான் அவரை சண்டை போட்டு வீழ்த்த முடியும்.
அண்ணா வழியில் அரசியல் என்றால்? ஸ்டாலின் என்ன வழியில் போய் கொண்டு இருக்கிறார். எடப்பாடி என்ன வழியில் போய் கொண்டு இருக்கிறார். அவர்கள் எல்லாம் அண்ணா வழியில் போய் கொண்டு இருக்கிறார்கள். நான் எங்கள் அண்ணன் வழியில் போய் கொண்டு இருக்கிறேன். இவ்வாறு சீமான் கூறினார்.

