அடுத்த வருஷம் ஆட்டத்தை பாருங்க; அடித்துச் சொல்கிறார் நீரஜ் சோப்ரா!
அடுத்த வருஷம் ஆட்டத்தை பாருங்க; அடித்துச் சொல்கிறார் நீரஜ் சோப்ரா!
ADDED : செப் 27, 2024 03:21 PM

புதுடில்லி: அடுத்தாண்டு நடைபெறவுள்ள, உலக சாம்பியன்ஷிப் தொடருக்கு முழுமையாக தயாராகி விடுவேன் என ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா நம்பிக்கை தெரிவித்தார்.
கடந்த 2020 ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கமும், இந்தாண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கமும் வென்றவர் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா.இப்போது அவருக்கு கையில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக போட்டிகளில் பங்கேற்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: பெல்ஜியத்தின் பிரஸ்சல்ஸில் நடந்த, டயமண்டு லீக் இறுதி போட்டியில், கை ஒடிந்த நிலையில் தான் போட்டியில் பங்கேற்றேன்.
2025ல் உலக சாம்பியன்ஷிப் போட்டி, டோக்கியோவில் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ளது. அப்போது நுாறு சதவீதம் தகுதி பெற்றுவிடுவேன்.இப்போதைக்கு அந்த போட்டிதான் மிகப்பெரிய இலக்கு. அதில் எனது முழு திறனையும் வெளிப்படுத்துவேன். இவ்வாறு நீரஜ் சோப்ரா கூறினார்.

