கனமழை எச்சரிக்கை: 3 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை
கனமழை எச்சரிக்கை: 3 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை
UPDATED : அக் 28, 2025 01:43 AM
ADDED : அக் 27, 2025 10:47 PM

சென்னை: கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய 3 மாவட்டங்களில் இன்று (அக்.,28) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்ததாழ்வு மண்டலம், புயலாக வலுப்பெற்றுள்ளது. இது சென்னையில் இருந்து தென்கிழக்கே நிலை கொண்டுள்ளது. இது தீவிர புயலாக உருவெடுத்து இன்று ( அக்.,28) ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினம் - கலிங்கப்பட்டினம் இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் உத்தரவிட்டுள்ளார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவள்ளூரில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் பிரதாப் உத்தரவிட்டுள்ளார்.
அதை தொடர்ந்து ராணிப்பேட்டையில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

