ADDED : நவ 14, 2024 09:31 PM
கரோல்பாக்:பராமரிப்புப் பணிகள் காரணமாக வரும் 20, 21 ஆகிய தேதிகளில் -வடக்கு புறநகர்ப் பகுதிகளில் தண்ணீர் வினியோகம் பாதிக்கப்படும்' என, டில்லி குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து குடிநீர் வாரியம் வெளியிட்ட அறிக்கை:
குழாய் பராமரிப்புப் பணிகள் காரணமாக நகரின் -வடக்குப் புறநகர்ப் பகுதிகளில் வரும் 20ம் தேதி மாலை முதல் 21ம் தேதி காலை வரை தண்ணீர் வினியோகம் இருக்காது.
இந்த நேரத்தில் எம்.பி.ஆர்., நீர்த்தேக்கத்தில் புதிதாக அமைக்கப்பட்ட 1,500 மி.மீ., 900 மி.மீ., விட்டமுள்ள நீரேற்றுக் குழாய்கள் உள்ளிட்ட சில இடங்களில் இணைப்பு மற்றும் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பக்தவார்பூர், தாஜ்பூர், பகோலி, புத்பூர், கேரா கலான், கெரா குர்த், யு/ஏ மற்றும் நரேலாவின் முறைப்படுத்தப்பட்ட காலனிகள் ஆகிய பகுதிகளில் தண்ணீர் வினியோகம் பாதிக்கப்படும்.
மேற்கண்ட பகுதிகளில் வசிப்பவர்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி, நிலைமையை சமாளித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
குடிநீர் வாரியத்தின் உதவி எண் அல்லது மத்திய கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு தேவைக்கேற்ப தண்ணீர் டேங்கர்களை இந்த பகுதி மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.