ADDED : மே 21, 2025 03:07 AM

ஆப்பரேஷன் சிந்துார் ஒரு சின்னம்; ஒரு உறுதிமொழி. நாட்டின் பெண்களை குறிவைத்தால், ஒட்டு மொத்த நாடும் அவர்களை காக்க திரண்டு நிற்கும் என்ற செய்தி பயங்கரவாதிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. நம் பிரதமர் அனுப்பிய வலுவான இந்த செய்தியை பாராட்டுகிறேன்.
ஸ்மிருதி இரானி
மூத்த தலைவர், பா.ஜ.,
மக்கள் பணம் மக்களுக்கே!
கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. பெண்களுக்கு மாதம் 2,000 ரூபாய் நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது. மக்களின் பணம் ஏழைகளுக்கு வழங்கப்படுகிறது. பா.ஜ.,வோ மொத்த பணத்தையும் இரண்டு, மூன்று கோடீஸ்வரர்களுக்கு வழங்குகிறது.
ராகுல்
லோக்சபா எதிர்க்கட்சித்
தலைவர், காங்கிரஸ்
ரோஹிங்யாக்களின் அச்சுறுத்தல்!
மேற்கு வங்கத்தில் இருந்து ஆந்திராவுக்கு வந்த ரோஹிங்யா அகதிகள் தங்க நகைத் தொழிலில் வேலைகளைப் பறித்ததாக புகார்கள் வந்தன. சட்டவிரோத குடியேறிகள் உள்ளூர் மக்களின் வேலைவாய்ப்பை மட்டும் பாதிக்கவில்லை, தேசிய பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாக உள்ளனர். உறுதியான நடவடிக்கை தேவை.
பவன் கல்யாண்
ஆந்திர துணை முதல்வர்,
ஜனசேனா