ADDED : செப் 07, 2025 02:30 AM

நாட்டிற்கு சிறந்த எதிர்க்கட்சியும், தலைவர்களும் தேவை. ஜி.எஸ்.டி., 2017ல் அறிமுகப்படுத்தப்பட்டபோது, நான்கு வரி அடுக்குகளை முடிவு செய்தது பா.ஜ., அல்ல; மாநில நிதியமைச்சர்களின் அதிகார குழு. எதிர்க்கட்சி யினர் நான் சொல்வது தவறு என நிரூபித்தால், மன்னிப்பு கேட்க தயார். எனக்கு எந்த அகங்காரமும் இல்லை.
நிர்மலா சீதாராமன் மத்திய அமைச்சர், பா.ஜ.,
தவறு நடந்துவிட்டது!
கேரள காங்கிரசின் சமூக வலைதள பக்கத்தில் பீடியையும், பீஹாரையும் ஒப்பிட்டு பதிவிட்டது போதிய புரிதல் இல்லாததை காட்டுகிறது. தவறு நடந்துவிட்டது. இது குறித்து என் கவனத்திற்கு வந்ததும், உடனடியாக அந்த பதிவை நீக்கிவிட்டு, மன்னிப்பு கேட்க உத்தரவிட்டேன்.
சன்னி ஜோசப் மாநில தலைவர், கேரள காங்கிரஸ்
பொருளாதாரம் வளரும்!
ஜி.எஸ்.டி., குறைப்பு பொதுமக்களுக்கு மட்டுமின்றி, நாட்டின் பொருளாதாரத்துக்கும் ஆதாயம் தேடி தரும். காங்கிரஸ் ஆட்சியில் பல்வேறு வரிகளால் மக்களுக்கு பெரும் சுமை இருந்தது. இந்த சீர்திருத்தங்களுக்கு அரசு இயந்திரங்கள் ஒன்றரை ஆண்டுகளாக பணியாற்றி வந்தன.
அஸ்வினி வைஷ்ணவ் மத்திய அமைச்சர், பா.ஜ.,