தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/நாங்களும் ராஜினாமா செய்வோம்... அடுத்து 77 டாக்டர்கள் ரெடி: மம்தாவுக்கு அடுத்த அச்சுறுத்தல்!

நாங்களும் ராஜினாமா செய்வோம்... அடுத்து 77 டாக்டர்கள் ரெடி: மம்தாவுக்கு அடுத்த அச்சுறுத்தல்!

நாங்களும் ராஜினாமா செய்வோம்... அடுத்து 77 டாக்டர்கள் ரெடி: மம்தாவுக்கு அடுத்த அச்சுறுத்தல்!


ADDED : அக் 13, 2024 04:01 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 13, 2024 04:01 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோல்கட்டா: பயிற்சி பெண் டாக்டர் படுகொலை வழக்கில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, கோல்கட்டா மருத்துவர்கள் மேலும் 77 பேர், கூட்டாக ராஜினாமா செய்ய போவதாக தெரிவித்தனர்.

மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவ கல்லுாரியில் முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்து வந்த 31 வயதான பயிற்சி பெண் டாக்டர், கடந்த, ஆக.,9ம் தேதி பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் நாடு முழுதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து டாக்டர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் 50 டாக்டர்கள் கூட்டாக ராஜினாமா செய்தனர். தற்போது மீண்டும் கல்யாணி ஜெ.என்.எம் மருத்துவமனை டாக்டர்கள் கூட்டாக ராஜினாமா செய்யப்போவதாக 77 பேர் மேற்கு வங்க சுகாதார பல்கலைகழகத்திற்கு மெயில் அனுப்பி உள்ளனர்.

கல்யாணி ஜெ.என்.எம் மருத்துவர்கள் கூறுகையில், இளம் மருத்துவர்கள் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள். அவர்களின் உடல்நிலை மோசமாகி வருகிறது. மாநில அரசு, அதை கண்டுகொள்ளவில்லை. இந்த விவகாரத்தில் நடவடிக்கை எதுவும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. உடனே தலையிட்டு நீதி வழங்க வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை. இல்லையென்றால் நாளைக்கு ( அக்.14) கூட்டாக 77 பேர் ராஜினாமா செய்வோம், என்றனர்.

மம்தா தலைமையிலான அரசு, 50 பேர் கூட்டாக ராஜினாமா செய்தது செல்லாது. தனித்தனியே கடிதம் அனுப்ப வேண்டும் என கூறியது. இந்நிலையில், அடுத்ததாக, மேலும் 77 டாக்டர்கள் கூட்டாக ராஜினாமா செய்யப்போவதாக சொல்லி இருப்பது மம்தா அரசுக்கு மேலும் தலைவலியை அதிகப்படுத்தியுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us