மக்களை பாதுகாக்க எந்த எல்லையையும் தாண்டுவோம்; சொல்கிறார் ராஜ்நாத்சிங்
மக்களை பாதுகாக்க எந்த எல்லையையும் தாண்டுவோம்; சொல்கிறார் ராஜ்நாத்சிங்
ADDED : அக் 04, 2025 06:25 PM

புதுடில்லி: நம் நாட்டு மக்களை பாதுகாப்பதற்காக, எந்த எல்லையையும் தாண்டுவோம் என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
ஜெயின் சர்வதேச வர்த்தக அமைப்பு ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது; பஹல்காம் தாக்குதலுக்கு காரணமான பயங்கரவாதிகளை குறிவைத்தே தாக்குதல் நடத்தினோம். ராணுவ நிலைகள் மற்றும் பொதுமக்களின் இருப்பிடங்களை நாங்கள் தாக்கவில்லை. நாங்கள் நினைத்திருந்தால், முன்பே இதை செய்திருக்க முடியும். ஆனால், நாங்கள் செய்யவில்லை.
மோடி அரசு ராணுவத்தை பலப்படுத்துவது ஆதிக்கம் செலுத்துவதற்காக அல்ல. நாட்டின் ஒற்றுமை, இறையாண்மை மற்றும் ஒவ்வொரு இந்திய மக்களின் உயரையும் பாதுகாப்பதற்காகத் தான். நம் நாட்டின் பெருமை மற்றும கண்ணியத்தில் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ள மாட்டோம்.
இந்தியாவின் ஒற்றுமை, இறையாண்மை மற்றும் இந்திய மக்களின் உயிரைப் பாதுகாக்க எந்த எல்லையையும் தாண்டுவோம், இவ்வாறு கூறினார்.