sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

 வெனிசுலாவை நாங்கள் நிர்வகிப்போம் அமெரிக்க அதிபர் டிரம்ப் தடாலடி

/

 வெனிசுலாவை நாங்கள் நிர்வகிப்போம் அமெரிக்க அதிபர் டிரம்ப் தடாலடி

 வெனிசுலாவை நாங்கள் நிர்வகிப்போம் அமெரிக்க அதிபர் டிரம்ப் தடாலடி

 வெனிசுலாவை நாங்கள் நிர்வகிப்போம் அமெரிக்க அதிபர் டிரம்ப் தடாலடி

4


ADDED : ஜன 04, 2026 02:24 AM

Google News

ADDED : ஜன 04, 2026 02:24 AM

4


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாஷிங்டன்: வெனிசுலாவை இனி அமெரிக்கா நிர்வகிக்கும் என்று அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்தார்.

தென் அமெரிக்க நாடான வெனிசுலா, அமெரிக்காவுக்குள் போதைப்பொருள் கடத்துவதாக குற்றஞ்சாட்டி அந்நாட்டின் மீது நேற்று அமெரிக்க படைக ள் தாக்குதல் நடத்தின.

மேலும் அந்நாட்டின் அதிபர் நிக்கோலஸ் மதுரோவை சிறை பிடித்து அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்றனர்.

இந்த தாக்குதல் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று அளித்த பேட்டி:

என் உத்தரவுபடி வெனிசுலா தலைநகர் கராகஸ் மீது மிகப்பெரிய தாக்குதல் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

வான், நிலம், கடல் வழியாக அமெரிக்கப் படைகளின் முழு சக்தியை பயன்படுத்தினோம்.

அந்நாட்டு அதிபர் மதுரோவின் கோட்டையைத் தாக்கி, அவரையும், அவரது மனைவியையும் சிறை பிடித்தோம். இந்நடவடிக்கையில் எந்த ஒரு அமெரிக்க வீரரும் உயிரிழக்கவில்லை.

மதுரோ மற்றும் அவரது மனைவி நீதியின் முன் நிறுத்தப்படுவர். அமெரிக்க சட்டப்படி விசாரணை நடக்கும். நிலைமை சீராகும் வரை வெனிசுலாவை அமெரிக்கா நிர்வகிக்கும்.

வெனிசுலாவின் எண்ணெய் தொழில் தோல்வியடைந்துள்ளது. அதை அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள் சென்று சரிசெய்யும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us