ADDED : ஜூலை 10, 2025 06:18 AM

பீஹாரில் நேற்று நடந்த போராட்டத்தில் பங்கேற்ற லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் பேசியதாவது:
லோக்சபா தேர்தலை தொடர்ந்து, மஹாராஷ்டிரா மற்றும் ஹரியானாவில் சட்டசபை தேர்தல் நடந்தது. மஹாராஷ்டிராவில் லோக்சபா தேர்தலில் அமோக வெற்றி பெற்ற இண்டி கூட்டணி, அடுத்து நடந்த சட்டசபை தேர்தலில் மோசமான தோல்வியை சந்தித்தது. இதற்கு நாங்கள் எந்த கருத்தும் சொல்லவில்லை.
மாறாக, வாக்காளர் பட்டியல் தரவுகளை ஆராய்ந்தோம்-. ஒரு கோடி புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டதை அறிந்தோம். வாக்காளர்கள் அதிகம் சேர்க்கப்பட்ட பகுதிகளில் பா.ஜ., வென்றதும் கண்டுபிடிக்கப்பட்டது. தேர்தல் கமிஷனிடம் வாக்காளர் பட்டியலை கேட்டால், அமைதியாக இருக்கிறது. மஹாராஷ்டிராவில் நடந்தது போல், பீஹாரிலும் ஓட்டுத் திருட்டுக்கு பா.ஜ., முயற்சிக்கிறது.
ஆனால், பீஹார் மக்கள் இதை நடத்தவிடமாட்டார்கள். வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி என்பது, ஓட்டுகளை திருடும் முயற்சி. அரசியலமைப்பை பாதுகாக்க வேண்டிய தேர்தல் கமிஷன், பா.ஜ.,வின் அறிவுறுத்தல்படி செயல்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.