அரசியல் சாசனத்தையும், இட ஒதுக்கீட்டையும் பாதுகாப்போம்: சொல்கிறார் ராகுல்
அரசியல் சாசனத்தையும், இட ஒதுக்கீட்டையும் பாதுகாப்போம்: சொல்கிறார் ராகுல்
UPDATED : ஆக 20, 2024 04:20 PM
ADDED : ஆக 20, 2024 04:04 PM

புதுடில்லி: ‛‛ என்ன விலை கொடுத்தாவது அரசியல் சாசனத்தையும், இட ஒதுக்கீட்டையும் பாதுகாப்போம் '', என எதிர்க்கட்சி தலைவர் ராகுல் கூறியுள்ளார்.
மத்திய அரசு துறைகளில் 45 இணைச் செயலர்கள், இயக்குநர்கள், துணை செயலாளர்கள் பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் நிபுணர்களை பணி நியமனம் செய்ய மத்திய அரசு அழைப்பு விடுத்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனையடுத்து மத்திய அரசு ரத்து செய்தது.
முறியடிப்போம்
காங்கிரஸ் தலைவர் கார்கே வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: அரசியல் சாசனம் வென்றது. நமது தலித்கள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் நலிந்த பிரிவினரின் சமூக நீதிக்கான போராட்டம், இட ஒதுக்கீட்டை பறிக்கும் பா.ஜ.,வின் திட்டங்களை முறியடித்து உள்ளது. அரசியல் சட்டத்தின் அதிகாரத்தால் மட்டுமே, சர்வாதிகார ஆட்சியின் ஆணவத்தை முறியடிக்க முடியும் என்பதை மோடி அரசின் லேட்டரல் என்ட்ரி கடிதம் காட்டுகிறது.
ராகுல், காங்கிரஸ் மற்றும் கட்சிகளின் பிரசாரத்தினால், அரசு ஒரு படி பின்வாங்கி உள்ளது. ஆனால், பாஜ., ஆர்எஸ்எஸ் ஆட்சியில் இருக்கும் வரை இட ஒதுக்கீட்டை பறிக்க புதிய யுக்திகளை பின்பற்றிக் கொண்டே இருக்கும். நாம் கவனமுடன் இருக்க வேண்டும். இவ்வாறு கார்கே கூறியுள்ளார்.