பயங்கரவாதிகளை ஆதரிக்கும் படுபாதக பாகிஸ்தான் மீது என்னென்ன நடவடிக்கை எடுக்கலாம்?: இங்கு எழுதுங்கள் வாசகர்களே...
பயங்கரவாதிகளை ஆதரிக்கும் படுபாதக பாகிஸ்தான் மீது என்னென்ன நடவடிக்கை எடுக்கலாம்?: இங்கு எழுதுங்கள் வாசகர்களே...
UPDATED : ஏப் 25, 2025 02:45 PM
ADDED : ஏப் 24, 2025 10:50 AM

புதுடில்லி: மீண்டும் தனது ஈன புத்தியை காட்டிவிட்டது பாகிஸ்தான். ‛‛நாயை குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தாலும் அது குணத்தைக் காட்டிவிடும்'' என்ற பழமொழிக்கு ஏற்ப, காஷ்மீருக்குள் பயங்கரவாதிகளை ஆயுதங்களுடன் அனுப்பி, அப்பாவி சுற்றுலா பயணிகளை சுட்டுக்கொல்ல வைத்துள்ளது.
‛‛இந்த கொடுஞ்செயலுக்கு பாகிஸ்தான் தான் காரணம்'' என்று இந்தியா கூறினால், அப்பாவி வேடம் போடுகிறது அந்த அயோக்கிய நாடு.
இம்முறை பாகிஸ்தானுக்கு இந்தியா கொடுக்கப் போகும் அடி பலமாக இருக்க வேண்டும். இதற்கு முன்னோட்டமாக எல்லை மூடல்; துாதரக அதிகாரிகளின் எண்ணிக்கை குறைப்பு; இந்தியாவில் இருக்கும் பாகிஸ்தானியர் வெளியேற உத்தரவு போன்ற நடவடிக்கைகளை இந்தியா எடுத்துள்ளது.
இருப்பினும் இது போதாது என்பது பலரது கருத்து.
யோசனைகள்
1. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் இருக்கும் காஷ்மீரின் ஒரு பகுதியை இந்தியா மீட்க வேண்டும்.
2. பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களை இந்திய ராணுவம் தாக்கி அழிக்க வேண்டும்.
3.பாகிஸ்தானுக்கு இந்தியாவில் இருந்து காய்கறிகள். உணவு தானியங்கள், டெக்ஸ்டைல்கள் மற்றும் இதர பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுவதை நிறுத்த வேண்டும்.
4.இந்தியாவில் இருந்துகொண்டு பாகிஸ்தானுக்கு ஆதரவாக யார் பேசினாலும் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
5.பாகிஸ்தானில் தனி நாடு கேட்டு போராடி வரும் பலுசிஸ்தான், தனி நாடாக இந்தியா உதவ வேண்டும்.
-
இப்படி நிறைய யோசனைகள் இருக்கின்றன.
பல ஆண்டுகளாக தினமலர் இணையதள வாசகர்களாக இருப்பவர்களும், பாகிஸ்தானின் இந்த மனிதாபிமானமற்ற செயலால் கொந்தளித்துப் போய் இருக்கின்றனர். வாசகர்களும் பாகிஸ்தான் மீது என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து நமது கமென்ட் பகுதியில் உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். உங்கள் கருத்துகள் பலரால் கேட்கப்படும். அரசின் காதுகளுக்கும் போகும்.
எழுதுங்கள் வாசகர்களே.....