ADDED : ஜூலை 27, 2025 07:38 AM

ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத், இஸ்லாமிய இமாம் மற்றும் மவுல்விக்களை டில்லியில் சமீபத்தில் சந்தித்தார். இதில், 60 இஸ்லாமிய அறிஞர்கள் பங்கேற்றனர். பகவத்துடன், ஆர்.எஸ்.எஸ்., ஸின் முக்கிய சீனியர் தலைவர்களும், இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
ஏற்கனவே 2022ல், பகவத் டில்லியிலுள்ள மசூதிக்கு சென்று, அங்குள்ள இமாமையும் சந்தித்துள்ளார். 'இரண்டு சமூகத்தினரும் ஒற்றுமையாக, அமைதியாக இருக்க வேண்டும் என்பதுதான் எங்களின் விருப்பம்' என, சொன்னாராம் பகவத்.
'நாங்களும் அதைத்தான் விரும்புகிறோம். புல்டோசர்களை வைத்து, முஸ்லிம்களின் வீடுகளை இடிப்பது, எங்கள் வியாபாரங்களை புறக்கணிப்பது, பசு வதை என்ற பெயரில், எங்களை வதைப்பது போன்ற விஷயங்களை நிறுத்த வேண்டும். அனைவரும் ஒற்றுமையாக இருந்து, இந்தியாவை வல்லரசாக்க வேண்டும் என்பதுதான் எங்கள் ஆசை' என, கூறி னாராம், அகில இந்திய இமாம் தலைவர், உமர் அகமது இலியாசி.
நிச்சயம் இதை ஆட்சியில் உள்ளவர்களிடம் எடுத்து செல்வேன். அதே சமயம், ஹிந்து - முஸ்லிம்களுக்கிடையே வெறுப்பை ஏற்படுத்தும், பேச்சுக்களை சமய தலைவர்கள் நிறுத்த வேண்டும் என. கேட்டுக் கொண்டாரம் பகவத்.
இந்த சந்திப்பு, அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தினாலும், ஆர்.எஸ்.எஸ்., தலைவர்களோ, 'இதற்கு பிரதமர் மோடியின் ஆதரவு உள்ளது; மேலும், இது போன்ற சந்திப்புகள் நடக்கும்' என்கின்றனர்.