ADDED : டிச 01, 2024 11:07 PM
பெங்களூரு: சமூக நலத்துறைக்கு உட்பட்ட, மாணவர் விடுதிகள், உறைவிட பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் சிற்றுண்டி, உணவை பற்றி பொது மக்கள் தெரிந்து கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து, சமூக நலத்துறை வெளியிட்ட அறிக்கை:
மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில், சமூக நலத்துறை கட்டுப்பாட்டில் மாணவர் விடுதிகள், உறைவிட பள்ளிகள் செயல்படுகின்றன. இப்பள்ளிகள், விடுதிகளில் வழங்கப்படும் உணவு தரமானதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே மாணவர் விடுதிகள், உறைவிட பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் சிற்றுண்டி, உணவை பற்றி பொது மக்கள் தெரிந்து கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.
மாணவர் விடுதிகள், உறைவிட பள்ளிகளில் தினமும் மாணவர்களுக்கு வழங்கும் சிற்றுண்டி, மதிய உணவு, இரவு உணவு பற்றிய விபரங்கள் போட்டோக்களுடன், https://foodswdok.in/cr என்ற இணையதளத்தில், 'அப்லோடு' செய்யப்படும். இந்த விபரங்களை பொது மக்கள், மாணவர்களின் பெற்றோர் தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.