நீங்கள் நினைப்பது நிச்சயம் நடக்கும்; பிரதமர் அதை செய்வார்: பஹல்காம் விவகாரத்தில் ராஜ்நாத் சிங் உறுதி
நீங்கள் நினைப்பது நிச்சயம் நடக்கும்; பிரதமர் அதை செய்வார்: பஹல்காம் விவகாரத்தில் ராஜ்நாத் சிங் உறுதி
ADDED : மே 04, 2025 09:43 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: பஹல்காம் விவகாரத்தில் நீங்கள் எதிர்பார்த்தபடி பிரதமர் மோடியின் நடவடிக்கை இருக்கும் என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி அளித்துள்ளார்.
டில்லியில் சமஸ்கிருத ஜாக்ரன் மஹோத்சவ நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார். அப்போது கூறியதாவது;
பிரதமரின் செயல்பாடுகள், திறமை, உறுதி மற்றும் விடாமுயற்சியை நீங்கள் நன்றாக அறிவீர்கள். எனவே நீங்கள் எதிர்பார்ப்பது நடக்கும் என்று உங்களுக்கு உறுதியளிக்க நான் விரும்புகிறேன்.
ஒரு பாதுகாப்பு அமைச்சராக நமது நாட்டை தாக்க துணிந்தவர்களுக்கு தகுந்த பதிலடி வழங்குவது எனது பொறுப்பு. ஒரு பாதுகாப்பு அமைச்சராக எனது வீரர்களுடன் சேர்ந்து நாட்டின் எல்லைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதும் எனது பொறுப்பு.
இவ்வாறு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.

