வரலாறு கருணை காட்டும்: பதவி விலகும் போது மன்மோகன் சிங் சொன்னது இதுதான்!
வரலாறு கருணை காட்டும்: பதவி விலகும் போது மன்மோகன் சிங் சொன்னது இதுதான்!
ADDED : டிச 27, 2024 07:39 AM

புதுடில்லி: 'எதிர்க்கட்சியினர், சமகால ஊடகங்களை காட்டிலும், வரலாறு என் மீது கருணையுடன் இருக்கும் என்று நம்புகிறேன்' என 2014ல் செய்தியாளர்கள் சந்திப்பில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார்.
நீண்ட காலம் அரசியல் பதவியில் இருந்தாலும், சர்ச்சைக்குரிய கருத்துக்கள், விமர்சனங்கள் எதையும் வெளிப்படுத்தாதவர் மன்மோகன் சிங். கடந்த 2014ல் பிரதமர் பதவியில் இருந்து விலகுவதற்கு முன், செய்தியாளர்கள் சந்திப்பில், கேள்விக்கு பதில் அளித்து மன்மோகன் சிங் கூறியதாவது: நான் பலவீனமான பிரதமராக இருந்தேன் என்று நான் நம்பவில்லை. எதிர்க்கட்சியினர், சமகால ஊடகங்களை காட்டிலும் வரலாறு என்மீது கருணையோடு இருக்கும் என்று நம்புகிறேன்.
நேர்மையாக இருந்தேன் என்பதை நான் நம்புகிறேன். சூழ்நிலைக்கு ஏற்ப என்னால் முடிந்ததைச் செய்துள்ளேன். நான் என்ன செய்தேன், என்ன செய்ய வில்லை என்பதை வரலாறு தீர்மானிக்கும். அடுத்த பிரதமர் ஐ.மு., கூட்டணியில் இருந்து வருவார் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. எனது பிரதமர் பதவி காலத்தில் பதவி விலகுமாறு என்னை யாரும் வற்புறுத்தவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

