ADDED : பிப் 15, 2024 05:02 AM

ஹூப்பள்ளி : ''பா.ஜ., - ம.ஜ.த., தொகுதி பங்கீடு இறுதியாகவில்லை,'' என்று, மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி கூறி உள்ளார்.
ஹூப்பள்ளியில் நேற்று அவர் அளித்த பேட்டி:
தேசிய ஜனநாயக கூட்டணியில், ம.ஜ.த., சேர்ந்து உள்ளது. லோக்சபா தேர்தலில் அந்த கட்சிக்கு, எத்தனை தொகுதி ஒதுக்கப்படும் என்று தெரியாது. இதுவரை தொகுதி பங்கீடு இறுதியாகவில்லை.
வரும் 17, 18ம் தேதிகளில், எங்கள் கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் நடக்கிறது. அதன்பின்னர் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படும்.
மாண்டியா, ஹாசன் தொகுதிகள் யாருக்கு என்று, இன்னும் முடிவு எடுக்கவில்லை. எங்கள் தேசிய தலைவர்கள் மாண்டியா, ஹாசன் மாவட்ட பா.ஜ., நிர்வாகிகளுடன் பேசுவர். வரும் லோக்சபா தேர்தலில், தார்வாட்டில் மீண்டும் வெற்றி பெற, தயாராகி வருகிறேன்.
அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில், வெற்றி பெறுவேன் என்று நம்பிக்கை உள்ளது. தார்வாட் மாவட்ட காங்கிரசார், அக்கட்சியில் இருந்து விலகி, பா.ஜ.,வில் இணைவர்.
இவ்வாறு அவர் கூறினார்.

