ADDED : நவ 14, 2025 12:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாந்தினி சவுக்:'பாதுகாப்பு காரணங்களுக்காக மறு அறிவிப்பு வரும் வரை லால் கிலா மெட்ரோ ரயில் நிலையம் மூடப்பட்டிருக்கும்' என, மெட்ரோ ரயில் நிர்வாகம் நேற்று அறிவித்தது.
கடந்த 10ம் தேதி இரவு செங்கோட்டை அருகே கார் குண்டுவெடிப்பைத் தொடர்ந்து, லால் கிலா மெட்ரோ ரயில் நிலையம் மூடப்பட்டது. குண்டுவெடிப்பு நிகழ்ந்த பகுதி முழுவதையும் விசாரணை பிரிவினர், தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
தொடர்ந்து தடயங்கள் சேகரிக்கப்பட்டு வருவதால், பாதுகாப்பு காரணங்களுக்காக லால் கிலா மெட்ரோ நிலையம் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்படும் என, டில்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் நேற்று மீண்டும் அறிவித்தது.
குண்டுவெடிப்பு நிகழ்ந்த பகுதியில் நேற்றும் துண்டிக்கப்பட்ட கை ஒன்று மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

