3வது அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் எப்போது: சொல்கிறார் கடற்படைத் தலைவர்
3வது அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் எப்போது: சொல்கிறார் கடற்படைத் தலைவர்
ADDED : டிச 04, 2024 10:36 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பூரி: அணுசக்தியால் இயங்கும் மூன்றாவது நீர்மூழ்கிக் கப்பல் வரும் மாதங்களில் அறிமுகப்படுத்த இருக்கிறோம் என இந்திய கடற்படைத் தலைவர் அட்மிரல் தினேஷ் திரிபாதி இன்று தெரிவித்தார்.
இன்று இந்திய கடற்படை தினம் கொண்டாடப்பட்டது. 1971ம் ஆண்டு போரில் பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்தை இந்திய கடற்படை முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தி வெற்றி கொண்டதன் நினைவாக இந்த தினம் கொண்டாடப்படுகிறது.
இதை ஒட்டி நடந்த நிகழ்ச்சியில் கடற்படை தலைவர் அட்மிரல்
தினேஷ் திரிபாதி கூறியதாவது:
ஐஎன்எஸ் அரிஹந்த் மற்றும் ஐஎன்எஸ் அரிகாத் உள்ளிட்ட இரண்டு அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள் இந்தியாவிடம் உள்ளன. மூன்றாவது அணுசக்தி நீர்மூழ்கி கப்பல், வரும் மாதங்களில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இவ்வாறு தினேஷ் திரிபாதி கூறினார்.